×

பிறவி இதய நோயாளிகளுக்கு நவீன மருத்துவ சிகிச்சை

சென்னை: மாலத்தீவை சேர்ந்த முகமது சயீதுக்கு (51), கடந்த 19 வருடங்களுக்கு முன் அயோர்டிக் வால்வு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, தி மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் ராஸ் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. பழுதான  அயோர்ட்டிக் சபல்மனரி வால்வு கொண்டு மாற்றப்பட்டு, இறந்த ஒரு மனிதனின் பல்மனரி வால்வுடன் இதய சிகிச்சை அளிக்கப்பட்டது. சயீதின் ஹோமியோ கிராப்பிட் வால்வு சுருங்கி பாதிப்படைந்தள்ளதை அறிந்த மாலத்தீவு இதய நிபுணர்கள் அவரை எம்.எம்.எம் மருத்துவமனையின் தலைமை குழந்தை இதயவியல் நிபுணர் சிவகுமாரிடம் சிகிச்சைக்கு அனுப்பினர். பழுதடைந்த  ஹோமா கிராப்பிக் வால்வை மாற்ற முற்பட்டால் முன்னர் மேற்கொள்ளப்பட்ட நெஞ்சின் வாழ்வின் மீது மறுஅறுவை சிகிச்சையாகவே செயல்படும். நீண்ட நாள் தீவிர சிகிச்சை பிரிவின் வாசம் முறையிலான காரணங்களால் அறுவை சிகிச்சை இல்லாத மாற்று முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை சுமார் மூன்னறை மணி நேரம் நடந்தது. இது பிறவி இதய  நோயாளிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. பால்மனரி வால்வு மட்டுமல்ல. அயோர்ட்டிக் மைட்ரல் மற்றும் டிரைகஸ்பிட் வால்வு நோய்களிலும் இவை பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. முதியவர்களுக்கு அயோர்ட்டிக்  வால்வு கடினமடைந்து செயல்படத் தவறும்போது இத்தகைய சிகிச்சை மிகவும் பயனளிக்கிறது.   இந்த முறையில் 50க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்….

The post பிறவி இதய நோயாளிகளுக்கு நவீன மருத்துவ சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mohammed Saeed ,Maldives ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...